ஆத்மதர்ஷன் – இதில் என்ன சொல்லப் போகிறோம் என்பதற்கு முன்னால் ஒரு சிறு விளக்கம் தர வேண்டியது எங்களின் கடமை.
த்வைத சித்தாந்தின்படி பரமம் எங்கும் வியாபித்து இருப்பது. ஆன்மம் ஒரு கூட்டுகள் அடங்கி இருப்பது. இந்த ஆன்மா அழிவற்றது. அதை தன்னுள் அடக்கி இருக்கும் உடல் அழியக் கூடியது.
நா ஜாயதே ம்ருயதே வ விபஸ்சித்
நயம பவித பூத வ ந பூயாயஹ
அஜோ நித்யஹ சாஸ்வதோயம் புரானோ
ந ஹன்யதே ஹன்யமானே சரீரே
என்று கடோபநிஷதத்தில் கூறப்பட்டிருக்கிறது. பரமம் எனப்படும் பிரம்மத்தால் உருவாக்கப்பட்ட உடலின் அவயவங்கள் மூலம் ஆத்மா தரிசனம் காண்கிறது. இறைவனை தரிசிக்கும் மனிதன் ஒரு கணம் கண் மூடி தரிசிக்கிறான். அது ஆத்ம தரிசனம். நல்ல இசை கேட்கும்போது கண் மூடி ரசிக்கிறான். அது ஆத்ம தரிசனம். இப்படி பல கணங்களின் தொகுப்பும் உடலின் அவயவங்களும் ஒடுங்கி நம்முடைய ஆத்மா தரிசனம் பெரும் போதுதான் மனிதன் படைப்பின் தத்துவமான பிரம்மத்தை உணர்கிறான்.
இதைத்தான் அஹம் பிரம்மாஸ்மி என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். அதாவது உன் ஹிருதயத்திலேயே - ஆத்மாவிலேயே பரமம் இருக்கிறது என்பது பொருள்.
ஸ்ரீ ஆதிசங்கரரின் அத்வைத சித்தாந்ததின்படி பரமாத்மா ஜீவாத்மா இரண்டும் ஒன்று என்ற பொருளில் பரமம் ஏகஹ என்கிறார்.
இப்படி, இந்த ஆன்மா தரிசிக்க வேண்டிய பல விஷயங்கள் நம்முடைய பாரத தேசத்தில் அமைந்திருக்கின்றன. நம்முடைய ஆத்மதர்ஷன் இணைய பத்திரிகை நம் பாரத தேசத்தைப் பற்றியும் அதன் அருமை பெருமைகளைப பற்றியும், அரிய பொக்கிஷங்களான வேதங்கள், உபநிஷதங்கள், கலை, இலக்கியம், இசை, நாட்டியம், நாடகம், பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள் போன்ற பல விஷயங்களை உங்களுக்கு அளிக்க இருக்கிறது.
பெண்கள் இந்த நாட்டின் கண்கள். அவர்களுக்கு என பிரத்தியேகமாக அவர்களின் திறமையை வெளியில் கொண்டு வரக் கூடிய சமையல் குறிப்புகள், அழகுக் குறிப்புகள், இன்னும் அவர்களின் சாதனைகள் என பலவும் இடம் பெற இருக்கின்றன.
இன்றைய இளைஞர்கள் நாளைய உலகின் மணிமகுடங்கள். அவர்களுக்கு என உபயோகமான பல பகுதிகள், சிறந்த அறிஞர்களின் வாழ்வியல் சிந்தனைகளை அளிக்க இருக்கிறோம்.
முதுமை நம் வாழ்கைக்கு ஒரு பெரிய வழிகாட்டி. அவர்களை புரிந்து கொண்டு அவர்களின் ஏக்கத்திற்கு ஒரு வடிகால் தரவும் இருக்கிறோம்.
படியுங்கள், ரசியுங்கள், சிந்தியுங்கள், ஆத்மதரிசனம் பெறுங்கள்.
குறைகள் இருப்பின் சுட்டிக் காட்ட தயங்காதீர்கள்.
உங்கள் குட்டு எங்களுக்கு ªû£ட்டு. .
Wednesday, February 10, 2010
Tuesday, January 26, 2010
அஹம் பிரம்மாஸ்மி
Hi All,
This is a new site developed to share my knowledge and get myself updated.
Please be a reader and guide me if I err.
Looking to meet you all,
Simmmam Raghu
This is a new site developed to share my knowledge and get myself updated.
Please be a reader and guide me if I err.
Looking to meet you all,
Simmmam Raghu
Subscribe to:
Posts (Atom)
